விவசாய துறையில் 173 உதவியாளர் பணியிடங்கள்

Image result for agriculture department in india

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.ஏ.ஆர்.,) கீழ் நாடுமுழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் காலியிடங்களை நிரப்பும் பணியை விவசாய விஞ்ஞானிகள் தேர்வு வாரியம் (அக்ரிகல்சுரல் சயின்டிஸ்ட்ஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டு) செய்து வருகிறது. இந்த அமைப்பு 173 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
காலியிடங்கள்: ஸ்டெனோகிராபர் கிரேடு 3 பிரிவில் 95 இடங்களும், லோயர் டிவிசன் கிளார்க் பிரிவில் 78 இடங்களும் என மொத்தம் 173 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 
வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய வயது சலுகை உள்ளது. 
கல்வித் தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும் ஸ்டெனோகிராபர் பதவிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். லோயர் டிவிசன் கிளார்க் பதவிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு மையம்: எழுத்துத்தேர்வு தமிழகத்தில் சென்னையில் மட்டுமே நடைபெறும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்ட் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் 200 ரூபாய். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. 
கடைசி நாள்: 2017 செப்., 25.
விபரங்களுக்கு: http://online.cbexams.com/asrb_steno_ldc_reg_2017/images/Steno_ldc-2017.pdf

Comments

Popular posts from this blog