ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள் புது டெல்லியில் உள்ள “Airport Authority of India” –ல் கீழ்க்கண்ட

புது டெல்லியில் உள்ள “Airport Authority of India” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Junior Executive (Civil)
காலியிடங்கள்: 50 (UR- 27, OBC-13, SC-7,ST-3)
கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Junior Executive(Electrical)
காலியிடங்கள்: 50 (UR- 27, OBC-13, SC-7,ST-3)
கல்வித்தகுதி: Electrical Engineering பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பணியின் பெயர்: Junior Executive(Electronics)
காலியிடங்கள்: 100 (UR- 66, OBC-17, SC-11,ST-36)
கல்வித்தகுதி: Electronics/Telecommunication/Electrical Engineering பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்
மேற்கண்ட பணிகளுக்கும் சம்பளம் மற்றும் வயதுவரம்பு விபரம்:
சம்பளம் : 16,400 – 40,500
வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு முறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் GATE-2016 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
சான்றிதழ் சரிப்பார்ப்பின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
அழைப்பு கடிதம் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள் /SC/ST/PWD/ பிரிவினருக்கு கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2017
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.aai.aero என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment