ஐ.டி.ஐ., படித்தவருக்கு மத்திய அரசு பணி


  1. Image result for hclஐ.டி.ஐ., படித்தவருக்கு மத்திய அரசு பணி
நமது நாட்டின் தாமிர உற்பத்தியில் முத்திரை பதித்து வரும் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் பெருமைக்குரியது. இந்த நிறுவனத்தில் ஐ.டி.ஐ., டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்கள் 75ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள் : எலக்ட்ரீசியனில் 25, ஆர்மச்சூரி வைண்டரில் 2, மெக்கானிக் டீசலில் 10, சி., அண்டு இ., வெல்டரில் 7, பிட்டரில் 10, டர்னரில் 5, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக்கில்2, டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கில் 3, சர்வேயரில் 3, கார்பென்டரில் 3, பிளம்பரில் 2ம் சேர்த்து மொத்தம் 75 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : விண்ணப்பதாரர்கள் 2017 செப்., 1 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு, உரிய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்ப படிவத்தை
முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து, பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Assistant General Manager (HR&A),

Hindustan Copper Limited,

Malanjkhand Copper Project,

Tehsil:- Birsa, P.O.- Malanjkhand,

 District Balaghat,

Madhya Pradesh -481116
விண்ணப்பிக்க கடைசி நாள் : அக். 8.

கூடுதல் விபரங்களுக்கு : www.hindustancopper.com

Comments

Popular posts from this blog

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை