தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிகள்
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிகள்தமிழக அரசு மருத்துவமனைகளில் 744 உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் இந்த பணியிடங்களுக்கான நியமனம் நடைபெற உள்ளது.
மயக்கவியல், உடற்கூறியல், உயிரி வேதியியல், தோல் மருத்துவம், காது - மூக்கு - தொண்டை, தடயஅறிவியல், பொது மருத்துவம், பொது அறுவைச்சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நோயியல், கண் மருத்துவம், முடநீக்கியல், குழந்தைகள் நலம், மருந்தியல், உடலியல் மற்றும் மறுவாழ்வு மருத்துவம், உளவியல், கதிரியக்க மருத்துவம், கதிரியக்க நோய் அறிதல், சமூக தடுப்பு மருத்துவம், காசநோய் மற்றும் நெஞ்சக நோய்கள் ஆகிய 19 துறைகளில் 744 உதவி மருத்துவ நிபுணர்கள் இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு தகுதியான மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான அறிவிப்பு www.mrb.tn.gov.in என்ற மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தின் மூலமாக மட்டுமே இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வோ, வாய்மொழித் தேர்வோ கிடையாது. தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலம் மட்டுமே இடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கு அக்டோபர் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தகுதிப் பட்டியல், நேர்காணல் நடைபெறும் தேதி உள்ளிட்டவை இணையதளத்தின் வாயிலாக பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment