பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், புதிதாக தொழில் தொடங்க விருப்பமுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரித்தார்.

பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், புதிதாக தொழில் தொடங்க விருப்பமுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்-பழங்குடியினர் 26 பேருக்கு கடன் வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் அனைத்து லாபகரமான உற்பத்தி-சேவை சார்ந்த சுற்றுப்புறச் சூழலுக்கு நன்மை பயக்கும் தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு அதிகபட்சமாக உற்பத்தி தொடர்பான தொழில் தொடங்க ரூ. 25 லட்சமும், சேவை தொடர்பான தொழில் தொடங்க ரூ. 10 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது.

நகர்ப்புறத்தில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமும், கிராமப்புறத்தில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 35 சதவீதம் மானியமும் வழங்கப்படும். கடனுதவி பெற வருமான வரம்பு இல்லை.

எனவே இந்தத் திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை www.kviconline.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதன் இரண்டு நகல்களை உரிய இணைப்புகளுடன்,

பொது மேலாளர்,

மாவட்டத் தொழில் மையம்,

சிட்கோ தொழில் பேட்டை,

செம்மண்டலம்,

கடலூர்-607 001

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ (04142-290116) தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்