பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு வேலைகள்

வேலுார் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பின்வரும் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளன.
பணிகள்: System Executive , Executive Lab, Technician Lab, Extension Officer , SFA ஆகிய பிரிவுகள் உள்ளன. இதன் மூலம் 17 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது தகுதி: பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30. மற்ற பிரிவினருக்கு வயது தகுதியில் உச்ச வரம்பு குறிப்பிடப்படவில்லை.
கல்வித் தகுதி:
System Executive பணிக்கு ஐ.டி. பிரிவில் அல்லது கம்ப்யூட்டர் சயின்சில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.சி.ஏ. முடித்திருக்க வேண்டும்
Executive Lab பணிக்கு பி.எஸ்.சி., தகுதியுடன் இரண்டாண்டு லேப் டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும்.
Technician Lab பணிக்கு இரண்டாண்டு லேப் டெக்னாலஜி படிப்பை
முடித்திருக்க வேண்டும்.
Extension Officer பணிக்கு பட்டப்படிப்புக்குப்பின் கூட்டுறவுப் பிரிவில் சிறப்புப் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும்.
SFA பணிக்கு ஐ.டி.ஐ., தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளின் மூலமாக தேர்ச்சி நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: இப்பதவிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.250.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது. இது டி.டி.யாக செலுத்தப்படவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் பிறந்த தேதி, ஜாதிச் சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள், அனைத்து கல்வித் தகுதி சான்றிதழ்கள், தமிழ் படித்ததற்கான சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ் இவற்றின் நகல்களுடன், சுயவிலாசமிட்ட அஞ்சலட்டை, 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் டி.டி. ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 2017, அக்., 5.
விண்ணப்பிக்கும் முகவரி:
The General Manager,
Vellore-Tirvannamalai District Cooperative Milk Producers Union Limited,
Sathuvachari,
Vellore-632 009.
கூடுதல் விபரங்களுக்கு : http://aavinmilk.com/hrvlr140917.html
Comments
Post a Comment