ஐ.டி.ஐ.,படித்தவர்களுக்கு வாய்ப்பு

நேஷனல் ஜியோபிஸிக்கல் ரிசர்ச் இன்ஸ்டியூட் (என்.ஜி.ஆர்.ஐ.,) என்பது சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவுகளில் ஒன்றாகும். புவி சார்ந்த் அறிவியல் ஆராய்ச்சிகளில் சிறப்பான பங்காற்றிவரும் இந்த நிறுவனம் ஹைட்ரோகார்பன், நீர்வளம், தாதுக்கள் போன்ற ஆராய்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் டெக்னீசியன் பிரிவில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: குரூப் 2 பிரிவிலான டெக்னீசியன் 1 பிரிவில் 37 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவு அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் 1ம் காலியிடங்கள் உள்ளன.
வயது: 29.09.2017 அடிப்படையில் டெக்னீசியன் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராகவும், அசிஸ்டென்ட் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: டெக்னீசியன் பதவிக்கு பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ., படிப்பு தேவைப்படும். ஐ.டி.ஐ., தகுதி இல்லாதவர்கள் உரிய டிரேடு பிரிவில் 2 வருட காலம் அப்ரென்டிஸ் பணிபுரிந்திருக்க வேண்டும். அசிஸ்டென்ட் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை எலக்ட்ரிகல் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017, செப்.29,
www.ngri.org.in
Comments
Post a Comment