தேசிய கட்டுமான கழகத்தில் பல்வேறு பணிகள்

NBCC என அழைக்கப்படும் தேசிய கட்டுமான கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
பொது மேலாளர்(நிதி), கூடுதல் பொது மேலாளர், துணை பொது மேலாளர், திட்ட மேலாளர், முதுநிலை திட்ட அதிகாரி, உதவி மேலாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 94 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: ICAI, ICWAI, MBA, Civil/Electrical பிரிவில் டிப்ளமோ, பட்டம், முதுகலை ஹிந்தி-ஆங்கிலம் முடித்தவர்களுக்கு மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:அதிகபட்சம் 49 வயதுடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் குழு கலந்துரையாடல், தனிநபர் நேர் காணல், எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி வேறுபடுவதால் முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.9.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்களை அறிய www.nbccindia.com என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்
Comments
Post a Comment