இன்டர்வியூ டிப்ஸ்

ரெஸ்யூமின் கீழே சிம்பிளாக, சிறந்த கம்யூனிகேட்டர் என்று பலரும் எழுதி வைத்திருப்பார்கள். அவை காப்பி பேஸ்ட் மேட்டர் என்றாலும், இதுபோன்ற சின்ன சிம்பிள் விஷயங்கள் வேலையை கான்க்ரீட்டாக்குவது உண்மை. அப்படி என்னென்ன தகுதிகள் தேவை பார்ப்போமா?
சகலமொழி வித்தகத்துவம் தேவை!
சிம்பிளாக சொன்னாலும் மொழியைக் கற்பது அவ்வளவு ஈஸி அல்ல. இன்டர்வியூவில் உங்களை செலெக்ட் செய்யும் நிறுவனம் சீனா அல்லது நெதர்லாந்து அனுப்புகிறார்கள் என்றால் என்ன செய்வீர்கள். எனவே தாய்மொழி பிரியத்தோடு பிறமொழிகளையும் உற்சாகமாக கற்றுக்கொண்டால் உலகத்தை டிவியில் அல்ல நேரடியாகவே பார்க்கும் சான்ஸ் நிச்சயமுண்டு.
சோஷியல் மீடியாவுக்கு நமஸ்காரம்!
உலகமே சோஷியல் மீடியாவில் காலை முதல் மாலை வரை ஓடிவிளையாடி இளைப்பாறுவது இன்றைய ட்ரெண்ட். எனவே இன்றைய நிறுவனங்கள் தங்களைப்பற்றியும் சமூகவலைத்தளங்களில் தகவல்களை பகிர்வதை முக்கியமாக நினைக்கின்றன. நீங்கள் சோஷியல் மீடியாவில் ஏ டூ இஸட் பதிவுகளில் பின்னுவீர்கள். உங்களுக்கான வேலை சான்ஸ் அமோகம். வேலைக்கு தனியாக பதிவு என்பதைவிட சமூகவலைத் தளங்கள் மூலமே வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை இன்று அதிகம்.
துடிப்பான பேச்சு!
நண்பர்கள் நான்கு பேரிடம் ஜாலிபேச்சில் பின்னுபவர்கள், தன்முன்னேயுள்ள 40 அலுவலக பணியாளர்களிடம் பேசுவதற்கு திக்கித்திணறி தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்குமா? நம்பிக்கையான மொழியில் மற்றவர்களோடு பேசுவதற்கு உங்களுக்கு தெம்பு உண்டா, உங்களுக்கு வேலைகள் கொட்டிக்கிடக்கின்றன. பின்னே மூளையில் உதித்த ஐடியாவை உங்களது டீமிடம் எனர்ஜியாக பேசி புரியவைக்காதபோது கம்பெனியின் டாலர் கனவு எப்படி நிறைவேறும். எனவே சீரியஸ் பேச்சையும் சிறிது காமெடி மிக்ஸ் செய்து காக்டெய்லாக கலக்குபவர்களுக்கு வேலைக்கு என்ன குறைச்சல்!
எழுத்துக்கு முன்னுரிமை!
நீங்கள் எந்த நிறுவனத்தில் சேர இன்டர்வியூ சென்றாலும், அதில் உங்களை கண்ணாடியாக நிறுவனத்திற்கு காட்டுவது ரெஸ்யூமில் நீங்கள் எழுதியுள்ள விஷயங்கள்தான். சிறுகதை எழுதுமளவு எழுத தெரியாவிட்டாலும், பிழையின்றி உங்களைப்பற்றியாவது ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக சொல்லத்தெரிவது அவசியம். இன்று உங்களது மொழியின் தவறுகளை மினிமமாக்க ஏராளமான ஆப்கள், இணையதளங்கள் உண்டு. எனவே தொடக்கத்திலேயே குழம்பாமல் முதலடியை ஷார்ப்பாக வைத்தால் வேலை வசப்படுவது நிச்சயம்.
கொஞ்சம் எக்ஸ்ட்ரா திறமைகள் தேவை
21 ஆம் நூற்றாண்டின் மந்திரச்சொல்லாக பிக்டேட்டா மாறிவிட்ட நிலையில் அதுபற்றி டீட்டெய்லாக படித்து பிராக்டிகலாக அறிவது நம்மை வேலையில் ஸ்டைலாக ஸ்ட்ராங்காக அமர்த்தும். கூடவே போட்டோ எடிட்டிங், வெப்சைட் டிசைன் போன்றவற்றை கற்றால், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஃப்யூச்சர் சொத்து என உங்களை தேர்வு செய்வது நிச்சயம்.
Comments
Post a Comment