I T B P


  1. Related imageITBP –ல் சப் இன்ஸ்பெக்டர் பணி
எல்லை பாதுகாப்பு படையில் (Indo-Tibetian Border  Police)கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Sub Inspector (Overseer)

காலியிடங்கள்: 21 (ஆண்கள் -18, பெண்கள் -3)

சம்பளம்: 35,400 – 1,12,400

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Civil Engg. பாடப்பிரிவில்  டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:  20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் SC/ST பிரிவினர்களுக்கு  5 வருடங்களும்  முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதி முறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் மூலம்  தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் General Engg. (Civil), General English பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.200.  . இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் SC/ST/Ex-SM பிரிவினருக்கு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.9.2017

Comments

Popular posts from this blog