NBRC –ல் பல்வேறு பணிகள்
தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், செவிலியர், கணினி இயக்குபவர் மற்றும் அதிகாரி, நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து அக்டோபர் 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Administrative Officer (Academics) - 01
பணி: Driver - 01
பணி: Computer Operator-II - 01
பணி: Nurse - 01
வயதுவரம்பு: 30, 35க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தகுதி: ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. இதனை “Director, NBRC” என்ற பெயரில் Gurgaon/ Manesar மாற்றத்த வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.nbrc.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Administrative Officer, NBRC,
Nainwal Mode, Manesar-122 051, Haryana.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.nbrc.ac.in/admin/careers/nb214.pdf
http://www.nbrc.ac.in/admin/careers/nb213.pdf
http://www.nbrc.ac.in/admin/careers/nb214.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment