NPCIL

இந்திய அணுசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் NPCIL நிறுவனத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் ஸ்டைபண்டரி டிரெய்னி / டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள் : பிளாண்ட் ஆப்பரேட்டரில் 14, எலக்ட்ரீசியனில் 6, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் / இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கல் 7, பிட்டரில் 14 சேர்த்து மொத்தம் 41 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி : பிளான்ட் ஆப்ரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 அளவிலான படிப்பை குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் அறிவியல்
புலத்தில் படித்திருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் உரிய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு தேவைப்படும்.
வயது : 18 - 24 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
உதவித்தொகை : இப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதம் ரூ.6,200 உதவித்தொகையாக பெற முடியும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 2017 அக்., 20.
கூடுதல் விபரங்களுக்கு : www.npcil.nic.in/main/JobsRecent.aspx
Comments
Post a Comment