NTC
புதுடெல்லியிலுள்ள “National Textile Corporation Limited” நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
Advt. No.: NTC/HO/2017/01
பணியின் பெயர்: Management Trainee (Textile)
கல்வித்தகுதி: Textile Technology பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Management Trainee (FInance)
கல்வித்தகுதி: CA/CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2 பணிகளுக்குமான சம்பளவிகிதம் மற்றும் வயதுவிபரம்:
சம்பளம்: 12,600 – 32,500
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC / PWD/ Ex-SM பிரிவினர்களுக்கு அரசு முறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
Management Trainee (Textile) பணிக்கு GATE-2017 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Management Trainee (Finance) பணிக்கு கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
UR/OBC/Ex-SM பிரிவினர்களுக்கு ரூ.300. இதனை “ National Textile Corporation Ltd., New Delhi” என்ற பெயரில் டி.டி யாக எடுக்க வேண்டும்
டி.டி யின் பின்னால் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பிக்கும் பணியின் பெயர், GATE பதிவு எண் மற்றும் முகவரியை குறிப்பிட வேண்டும். SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.ntcltd.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் டி.டி. ,GATE-2017 ,NOC சான்று PWD/Ex-Sm சான்று மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
National Textile Corporation Ltd.,
Post Bag No: 7 (Seven),
Lodhi Road, Head Post Office,
New Delhi – 110 003
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.9.2017
Comments
Post a Comment