TNPSC

Image result for TNPSCTNPSC குரூப் 2 தேர்வு-பதிவெண் பட்டியல் வெளியீடு
துணை வணிக வரி அலுவலர் உள்பட குரூப் 2 தொகுதியில் அடங்கியுள்ள பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டோரின் பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2 தொகுதியில், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை -2, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி மற்றும் நிதித் தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் மேற்பார்வையாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 18 விதமானபதவிகள் உள்ளன.

இவற்றில் 1,094 காலிப்பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 -இல் நடத்தப்பட்டது. அதில் 9,833 பேர் பங்கேற்றனர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அந்தப் பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2,169 பேர் தாற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in -இல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு அக்டோபர் 20 - ஆம் தேதி முதல் நவம்பர் 3 -ஆம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog