+2 தகுதிக்கு எல்லை பாதுகாப்பு படையில் 1,074 பணியிடங்கள் மத்திய காவல் படைகளில் ஒன்று எல்லை பாதுகாப்பு படை.

Image result for bsf+2 தகுதிக்கு எல்லை பாதுகாப்பு படையில் 1,074 பணியிடங்கள்
மத்திய காவல் படைகளில் ஒன்று எல்லை பாதுகாப்பு படை. துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்று. நாட்டின் சர்வதேச எல்லைப்பகுதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் 1965 டிச., 1ல் தொடங்கப்பட்டது. எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும் தான் இதன் முக்கியப் பணி. இப்படையில் காலியாக உள்ள 1,074 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் : காலியிடங்கள் 18 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தலைமையகம் பெங்களூரு எலங்காவில் உள்ளது.

கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும் தொழில் பயிற்சி நிறுவனத்தில் ஒரு வருட பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது :  18 முதல்  23 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய வயது சலுகை உள்ளது.

உடல் தகுதி : உயரம் குறைந்தது 167.5 செ.மீ., இருக்க வேண்டும். மார்பளவு 78 - 83 செ.மீ., அளவில் இருக்க வேண்டும். இதேபோல கண்பார்வையும் சிறப்பாக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முதலில் உயரம், மார்பளவு சோதனை செய்யப்படும். பின் 5 கி.மீ., துாரத்தை 24 நிமிடங்களுக்குள் ஓடி முடிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு டிரேடு தேர்வு நடக்கும். அனைத்திலும் தேர்வு பெற்றவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடக்கும். பின் மருத்துவ சோதனை அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய். இதனை 'டிடி' ஆக செலுத்த வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

STC BSF Bangalore,
Air Force Station
Yelahanka, Bangalore - 560063.

விண்ணப்பிக்க கடைசிநாள் : அக். 30.
கூடுதல் விபரங்களுக்கு : http://bsf.nic.in/doc/recruitment/r63.pdf

Comments

Popular posts from this blog