பட்டப்படிப்பு தகுதிக்கு யூனியன் வங்கியில் வேலை யூனியன் வங்கியில் காலியாக உள்ள 200 Credit Officer

Image result for union bankபட்டப்படிப்பு தகுதிக்கு யூனியன் வங்கியில் வேலை
யூனியன் வங்கியில் காலியாக உள்ள 200 Credit Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 200

பணி: Credit Officer

காலியிடங்கள்: 200 (SC - 49, ST - 24, OBC - 65, UR - 62)

சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

வயதுவரம்பு: 23 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும்  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.11.2017

தேர்வு மையம்: பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, லக்னோ, மும்பை

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.unionbankofindia.co.in/pdf/UBRP-2017-18RECRUITMENT-NOTIFICATION-CREDIT.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog