ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்

புது டெல்லியில் உள்ள “Airport Authority of India” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Junior Executive (Civil)
காலியிடங்கள்: 50 (UR- 27, OBC-13, SC-7,ST-3)
கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Junior Executive(Electrical)
காலியிடங்கள்: 50 (UR- 27, OBC-13, SC-7,ST-3)
கல்வித்தகுதி: Electrical Engineering பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பணியின் பெயர்: Junior Executive(Electronics)
காலியிடங்கள்: 100 (UR- 66, OBC-17, SC-11,ST-36)
கல்வித்தகுதி: Electronics/Telecommunication/
மேற்கண்ட பணிகளுக்கும் சம்பளம் மற்றும் வயதுவரம்பு விபரம்:
சம்பளம் : 16,400 – 40,500
வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு முறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் GATE-2016 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
சான்றிதழ் சரிப்பார்ப்பின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
அழைப்பு கடிதம் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள் /SC/ST/PWD/ பிரிவினருக்கு கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2017
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.aai.aero என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment