தேசிய கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் பல்வேறு பணிகள்
.jpg)
நியாட் என அழைக்கப்படும் இந்திய கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள 203 திட்ட ஆராய்ச்சியாளர், திட்ட ஆராய்ச்சி உதவியாளர், திட்ட தொழில்நுட்பனர், திட்ட நிர்வாகி உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Scientists – 106
Project Scientific Assistants - 48
Project Technicians - 21
Project Administration - 28
வயது வரம்பு: 30.10.2017-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல், புரொடக்சன், ஏரோ நாட்டிகல், ஆட்டோ மொபைல், நேவல் ஆர்கிடெக்சர், ஓசோன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஓசனோகிராபி, பிசிக்கல் ஓசோகிராபி, ஓசோன் டெக்னாலஜி, ஓசியானிக் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.niot.res.in என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்னையில் உள்ள ‘நியாட்’ இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர 6.11.2017 கடைசி தேதியாகும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.niot.res.in அல்லது https://www.niot.res.in/documents/admin_advertisement/Project%20Advertisement%202017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment