பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

Image result for (BELபொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 
 இந்திய அரசின் நவரத்தன் நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் பாதுகாப்பு துறைகளுக்கான தளவாடங்களை நாடும் முழுவதும் தொழிற்சாலைகள் அமைத்து உற்பத்தி செய்து தருகிறது. இந்நிறுவனத்தில் கஜியாபாத் கிளையில் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சீனியர் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், மெக்கானிக்கல் பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

மொத்த காலியிடங்கள்: 08

பணியிடம்: காசியாபாத்

பணி: Sr.Engineer /E-III

1. Electronics Engineer - 05
2. Mechanical Engineer - 02
3. Computer Science - 01

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500 + இதர சலுகைகள்

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணினி அறிவியல் துறைகளில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Manager (HR&A),

Bharat Electronics Limited,

Sahibabad Industrial Area,

Ghaziabad - 201010 b

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.com  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

 

Comments

Popular posts from this blog