மின்துறை நிறுவனத்தில் இளநிலை பொறியாளர்கள் பதவி

உத்தரப் பிரதேஷ் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது சுருக்கமாக UPPCL என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு ஜூனியர் இன்ஜினியரிங் டிரெய்னி பிரிவில் காலியாக இருக்கும் 226 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பும், துறை சார்ந்த அனுபவமும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்ப
தாரர்களுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.900/-ஐ இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : அக்.31.
கூடுதல் விபரங்களுக்கு : www.uppcl.org
Comments
Post a Comment