சத்துணவு மையங்களில் சமையலர் பணி-விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Related imageசத்துணவு மையங்களில் சமையலர் பணி-விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட சத்துணவுத் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்துக்கு, நேரடியாக நியமனம் செய்வதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 மேலும், விண்ணப்பத்துடன் புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்றிதழ், வருமானம், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் எனில் அதற்கான வட்டாட்சியர் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் எனில் அதற்குரிய அடையாள அட்டை மற்றும் மருத்துவர் சான்றிதழ் நகல்களுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சிகளில் 9 -ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, தகுதியானவர்ளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

Comments

Popular posts from this blog