இன்டர்வியூ டிப்ஸ் காமெடி முக்கியம்
இன்டர்வியூ டிப்ஸ்
காமெடி முக்கியம்
காமெடிதான் மனிதர்களின் ஆல்டைம் ஃபேவரிட். இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து நீங்கள் எப்படியிருப்பீர்கள்? என்று இன்டர்வியூவில் கேள்வி கேட்டால், சீரியஸ் (அ) காமெடி என உங்களுக்கு இரண்டு சாய்ஸ். “இதே துறையில் இதேபோன்ற வேலையில் இருப்பேன்” என்பது நார்மல் பதில். ‘ஐந்தாவது ஆண்டில் இதே கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டுக்கொண்டிருப்பீர்கள்’ என்பது காமெடி. ஜோக் என்பது சூரமொக்கையானாலும் உங்களது கான்ஃபிடன்ஸை பிறர் அறிந்துகொள்ள இவை அவசியம் என்கிறது ஹார்வர்ட் வணிகப்பள்ளியின் பர்சனாலிட்டி சயின்ஸ் மற்றும் சோஷியல் சைகாலஜி இதழில் வெளியான ஆய்வு ஒன்று.
பக்கா ப்ரொஃபைல் போட்டோ
உங்கள் நண்பருடன் எடுத்த செல்ஃபீயில் கத்தரி போட்டு ப்ரொஃபைலில் ஓட்டி வைத்தால் எப்படி ப்ரோ? மிக நெருக்கமாக இருப்பதை விட 5 அடி தள்ளி கேமரா வைத்து ‘பளிச்’ போட்டோ எடுத்தால் கச்சிதமாக தெளிவில் உங்கள் போட்டோவே உங்கள் ஆளுமைத்திறனை விளம்பரம் செய்வது நிச்சயம்.
எமோட்டிகான் வேண்டாம்
நேர்காணல் செய்தவருக்கு இமெயில் அனுப்பும் போது கவனம் தேவை. உங்கள் நண்பருக்கு அனுப்புவது போல ஸ்மைலி, எமோட்டிகான் ஸ்டிக்கர்களை மெசேஜில் இணைத்து அனுப்புவது உங்களது ஆளுமைத்திறனுக்கு உலை வைக்கும் பட்ஜெட் சூனியவேலை.
புல்லட்வேக பேச்சு
மின்னல் வேகத்தில் அல்ல. இன்டர்வியூ பதில்களை நேரத்தை வீணாக்காமல் தெரியும் அல்லது தெரியாது என்று சொல்வதை இது குறிக்கும். இது உங்களது கான்ஃபிடன்டை எதிரிலிருப்பவருக்கு உணர்த்துவதோடு, சூப்பர் டாஸ்க் மனிதராக வேலையை முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையையும் தரும்.
இலக்கண சுத்தம் அவசியம்
ரெஸ்யூமில் சிம்பிளாக பிழையின்றி எழுதுங்கள். தேவையென்றால் கிராப்களைகூட பயன்படுத்தலாம். அதோடு வேலைக்கான இன்டர்வியூவில் முதலிலேயே ஒத்திகை பார்த்தால்தான் நேர்காணலில் எதிரிலிருப்பவர்களை நெஞ்சின் தைரியத்தோடு எதிர்கொண்டு பதில் கூறமுடியும்.
ஓவர் எஸ்டிமேட் ஆபத்து
தன்னைத்தானே விஸ்வரூபமாக நினைத்துக்கொள்வது இன்டர்வியூவில் ஜீரோ பயனையே தரும். எதுவும் தெரியாமல் அனைத்தும் தெரிந்தவர் என சிலரும், அனைத்தும் தெரிந்தாலும் ‘அப்படியெல்லாம் இல்லீங்’க என சிலர் நேர்காணலில் தயங்குவதை ‘Dunning-Kruger effect’ என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். நேர்காணலில் தெரிந்ததை தெளிவாக சொன்னாலே வேலை உங்கள் பாக்கெட்டில் பத்திரமாகும்.

Comments
Post a Comment