இந்திய கப்பல் படையில் பணிகள்

Related imageஇந்திய கப்பல் படையில் பணிகள்
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான பாதுகாப்புப் படைகளில் இந்தியக் கப்பல் படையும் ஒன்று. பெருமைக்குரிய இப்படையில் நிரந்தர நிலை அதிகாரிகள் பிரிவில் உள்ள 40 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள் : பி.சி., எஜூகேஷன் பிரிவில் 17ம், எஸ்.எஸ்.சி., லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் 6ம், எஸ்.எஸ்.சி., ஐ.டி., பிரிவில் 15ம், எஸ்.எஸ்.சி., லா பிரிவில் 2ம் சேர்த்து மொத்தம் 40 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி : பி.சி., எஜூகேஷன் பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு எம்.எஸ்.சி., படிப்பை இயற்பியல் அல்லது கணிதத்தில் முடித்தவர்கள், எம்.எஸ்.சி., கணிதம் அல்லது ஆபரேஷன்ஸ் ரிசர்ச்சில் முடித்தவர்கள், எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, பி.டெக்., எலக்ட்ரானிக்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.சி., லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., ஐ.டி., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., ஐ.டி., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.சி., ஐ.டி., பிரிவுக்கு பி.இ., அல்லது பி.டெக்., கில் சி.எஸ்., சி.இ., ஐ.டி., எம்.எஸ்.சி., ஐ.டி, பி.எஸ்.சி., ஐ.டி., எம்.டெக்., சி.எஸ்., பி.சி.ஏ., எம்.சி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.சி., சட்டம் பிரிவுக்கு சட்டத்தில் பட்டப் படிப்பை முடித்து இதன் பின்னர் வழக்கறிஞராக பதிவு செய்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, குறைந்த பட்ச உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2017 அக்.,20.

கூடுதல் விபரங்களுக்கு : www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_30_1718b.pdf 

 

Comments

Popular posts from this blog

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை