இன்டர்வியூ டிப்ஸ் கொஞ்சம் லேட்டாயிருச்சு

Image result for இன்டர்வியூ டிப்ஸ் கொஞ்சம் லேட்டாயிருச்சுஇன்டர்வியூ டிப்ஸ்
கொஞ்சம் லேட்டாயிருச்சு
இன்டர்வியூ 9.30க்கு என்றால் எட்டரை மணிவரை தூங்கிவிட்டு அரக்க பரக்க எழுந்து வொயிட் போர்டு பஸ்ஸில் 9 மணிக்கு ஃபுட்போர்டில் சாகசம் செய்து ஏறினால் பீக் அவரில் ஜானவாச காராக பஸ் நகரும். நேர்காணலுக்கு நீங்கள் சர்வ நிச்சயமாக லேட்டாகத்தான் போகமுடியும். வேலையில் சேரும் முன்பே நீங்கள் இப்படி என்றால் வேலையில் சேர்ந்தபிறகு எப்படியிருப்பீர்கள்? என்றுதான் ஆபீஸ் செக்யூரிட்டி கூட நினைப்பார். வெயில், மழை, மின்னல் எனக் காரணம் கூறாமல் பங்க்சுவாலிட்டியாய் இருந்தால்தான் பக்கா கேரியர் உண்டு.

அவசரக்கோழி ஆபத்து
பள்ளியில் டெஸ்ட் என்றாலே 5 முறை பாத்ரூம் செல்லும் பதற்ற சிகாமணிகளின் பிரச்னை இது. மாலை 2 மணி நேர்காணலுக்கு, அலாரம் வைத்து காலை 6 மணிக்கே எழுந்து அலுவலக செக்யூரிட்டிக்கே டீ வாங்கி கொடுத்து 7 மணிக்கே நுழைவது இவர்களின் ஸ்டைல். நேர்காணலுக்கு 15 நிமிடங்கள் முன்னதாக அங்கிருந்தால் போதும்.

‘நேர்காணலுக்கு பதற்றமும் அவசரமுமாக வந்து காத்திருப்பது முட்டாள்களின் வேலை’ என How To Turn An Interview Into A Job’ நூலின் ஆசிரியர் ஜெஃப்ரி ஆலன் கூறுகிறார். நேரமே சென்று காத்திருப்பது நேர்காணல் செய்பவர்களை எரிச்சலூட்டும். லேட்டாக செல்வதைப்போலவே அதிமுன்னதாகச் செல்வதும் ஆபத்துதான்.

ட்ரெஸ் முக்கியம்
ஒருவரின் ட்ரெஸ்ஸை மற்றொருவர் பார்க்கும்போதே 15 நிமிடங்களுக்குள் அவரைப் பற்றிய கருத்து உருவாகிவிடும். ரெயின்போ கலர்களை சட்டையாய் தைத்து அணிவது மெரினா பீச் சவாரிக்கு சரி, இன்டர்வியூவுக்கு பொருந்தாதே ப்ரோ!. மெல்லிய நிறங்களான ப்ளூ, க்ரே ஆகிய நிறங்கள் ஓகே. டிவி, விளம்பரம் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளைத் தவிர்த்து கேஸூவல் ட்ரெஸ் வேண்டாம். “இன்டர்வியூவில் உங்கள் திறமைக்குத்தான் வேலை. ஆனால் நம்மைப் பற்றி நேர்காணல் செய்பவர்களின் மனதில் எழும் எண்ணங்கள் மிகவும் முக்கியம்” என்கிறார் ஆளுமைத்திறன் பயிற்சியாளர் ஜான் எல். லாஃபெவ்ர்.

ஆவணங்கள் அவசியம்
ட்ராஃபிக் போலீசை பார்த்ததும்தான் லைசென்ஸ் எடுக்காமல் மறந்து வந்துவிட்டது ஞாபகத்துக்கு வரும். ஆனால் அதுபோல இன்டர்வியூவில் செய்தால் நம்மைப்பற்றிய நல்ல எண்ணத்தை காசுகொடுத்துக் கூட உருவாக்க முடியாது. இங்கு கூறுவது ரெஸ்யூமை அல்ல. நேர்காணலுக்குத் தேவையான போட்டோக்கள், சர்டிஃபிகேட்டுகளை முன்பே எடுத்து வைத்துவிட்டால்  அட்டகாசம்.

Comments

Popular posts from this blog