BSNL


Image result for BSNLBSNL-ல் 996 பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.15 கடைசி
BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 15க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 996

பணி: Junior Accounts officer

தகுதி: 01.01.2017 தேதியின்படி M.Com., CA. ICWA, CS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும்  PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும்  முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு முறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 5.11.2017

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியானவர்கள் www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.1000. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bsnl.co.in என்ற லிங்கை கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog