Image result for RITESரைட்ஸ் நிறுவனத்தில் மேலாளர், துணை மேலாளர் வேலை
பொதுத்துறை நிறுவனமான RITES-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

1. பணி: Deputy General Manager (Civil)
காலியிடங்கள்: 02 (OBC-1, ST-1)

2. பணி: Manager

காலியிடங்கள்: 02 (OBC-1, ST-1)

2 பணிகளுக்குமான கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் B.E பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணி: Deputy General Manager (Electrical)
காலியிடங்கள்: 02 (UR)

4. பணி: Manager (Electrical)
காலியிடங்கள்: 02 (UR)

3 & 4 பணிகளுக்குமான கல்வித்தகுதி: Electrical/Electrical & Electronics Engineering பாடப்பிரிவில் B.E பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணி: Deputy General Manager (S & T)
காலியிடங்கள்: 02 (UR)

6. பணி: Manager (S & T)
காலியிடங்கள்: 02 (UR)

5 & 6 பணிகளுக்குமான கல்வித்தகுதி: Electrical/Electrical & Electronics/Electronics/Electronics & Communication/Computer Science/IT/Computer Engineering பாடப்பிரிவில் B.E பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6 பணிகளுக்குமான சம்பளம் மற்றும் வயது:

சம்பளம்:

Deputy General Manager பணிக்கு:  ரூ.29,100 – 54,500

Manager பணிக்கு: ரூ. 24,900 – 50,500

வயது: Deputy General Manager பணிக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Manager பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

SC/ST/OBC/PWD/EX-SM பிரிவினர்களுக்கு அரசு முறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் 2 புகைப்படங்கள், அட்டெஸ்ட் செய்யப்பட்ட PAN அட்டை உள்ளிட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Manager (P)/Rectt.,
RITES Limited, RITES Bhawan,
Plot No.1, Sector-29, Gurgaon, Haryana-122 001

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.10.2017

விண்ணப்பங்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 23.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rites.com  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்