TNPSC

Image result for TNPSCஅக்.12 -இல் VAO பணிக்கு கலந்தாய்வு
VAO காலிப் பணியிடங்களுக்கான 4-ஆம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.12) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
VAO காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது காலியாகவுள்ள இடங்களை நிரப்ப 4-ஆம் கட்டக் கலந்தாய்வு வரும் 12 -ஆம் தேதி, சென்னையில் உள்ள TNPSC அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதற்கான அழைப்பு உத்தரவை தேர்வாணைய இணையதளத்திலிருந்து www.tnpsc.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று TNPSC கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்