Image result for தமிழ்நாடு சமூக நல வாரியத்தில் பணிகள்
 
தமிழ்நாடு சமூக நல வாரியத்தில் பணிகள்
சமூக நல வாரிய தலைவி மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை தமிழக அரசு வரவேற்றுள்ளது.
இதுகுறித்த தமிழக அரசு செவ்வாய்க்கிழமை செய்திக்குறிப்பு:-
மத்திய சமூக நல வாரியத்தின் மாநில அங்கமாக கடந்த 1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு சமூக நல வாரியம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவிகளை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த வாரியத்துக்கு தலைவி மற்றும் வாரிய உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பணி இப்போது நடைபெறுகிறது. இதற்காக தலைசிறந்த சமூக சேவகிகளைத் தேர்வு செய்து, அந்தப் பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க உள்ளது.

எனவே, தகுதி மற்றும் அனுபவமுள்ள சமூக சேவகிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, அனுபவத்துக்கான சான்றிதழ்கள், புகைப்படங்களுடன் இணைத்து டிசம்பர் 29-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள்ளாக சென்னை சைதாப்பேட்டை அப்துல் ரசாக் தெரு எண்.21 முதல் தளத்தில் உள்ள தமிழ்நாடு சமூக நல வாரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை தமிழக அரசு இணையதளத்திலிருந்து www.tn.gov.in  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முறையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் கால தாமதமாக வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog