Image result for tamilnadu teachers recruitment board
 
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து-ஆசிரியர் தேர்வு வாரியம்
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் நேரடிப் போட்டி எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 7-ஆம் தேதி வெளியானது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவுகள் மீது தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு மனுக்களின் அடிப்படையில், கடந்த மாதம் வெளியான தேர்வு முடிவுகள் தற்போது திரும்பப் பெறப்படுகின்றன.

அனைத்து தேர்வர்களின் விடைத்தாள் நகல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்படுகிறது.
முரண்பாடுகள் இருந்தால்... இதில் ஏதேனும் முரண்பாடுகள் காணப்பட்டால் அதன் விவரங்களை வரும் 18-ஆம் தேதி மாலை 5.30-க்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவல் மையத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ (ஒப்புகையுடன்) தெரிவிக்கலாம்.

அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த பின்னரே திருத்திய சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments

Popular posts from this blog