TNPSC


Image result for TNPSC TNPSC நடத்திய நான்கு தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில், 24 காலியிடங்களுக்கு, 2013ல் தேர்வு நடந்தது. இதில், 51 பேருக்கு, வரும், 30ம் தேதி நேர்காணல் நடக்க உள்ளதுதடய அறிவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கு, 30 காலியிடங் களுக்கு, 2016ல் தேர்வு நடந்தது. இதில் தேர்வு பெற்ற, 66 பேருக்கு, அக்., 25ல் நேர்காணல் தேர்வு நடக்கும்கைத்தறி துறை உதவி இயக்குனர் பணிக்கு, 14இடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில், தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 12 பேருக்கு, வரும், 26ம் தேதி நேர்காணல் நடக்கும்சிறை அதிகாரி பணியில், ஆறு இடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற, 18 பேருக்கு, 27ம் தேதி நேர்காணல் நடக்கும்புவியியலாளர், உதவி புவியியலாளர் பணியில், 53 இடங்களுக்கு, 2016 ஜூனில் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற, 141 பேருக்கு, அடுத்த மாதம், 6,7ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்..

Comments

Popular posts from this blog

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை